தலைப்புச் செய்திகள்

14 மாதங்கள் பதவி வகித்த பின்னர், மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம்.பி வாசித் ராஜிநாமா

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று (14) ராஜிநாமா செய்துள்ளார்.

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அமைந்துள்ள இந்த ராஜினாமா குறித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு, நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

வாசித் ராஜிநாமா செய்துள்ளமையின் காரணமாக, 10-வது நாடாளுமன்றத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

1981-ஆம் ஆண்டின் 1-ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5)-வது பிரிவின் பிரகாரம், இது குறித்த தகவல், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலைச் சேர்ந்த வாசித், 2025 ஜூலை 08 அன்று – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அந்த வகையில் இவர் 14 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.