
இலங்கைக்கு கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் ஒரு சட்டவிரோத நடவடிக்கையை, சுங்கத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி, இந்த விதைகளை இலங்கைக்கு அனுப்புவதை சுங்கத்த திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர்.
முன்பெல்லாம் இலங்கைக்குப் போதைப்பொருட்களை விநியோகிப்பதற்கான முக்கிய பாதை, தாய்லாந்திலிருந்து அல்லது அதன் வழியாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இந்த வழித்தடம் மாறியுள்ளதாகவும், மடகஸ்கர், பிரித்தானியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயிரிடுவதற்காகவே கஞ்சா விதைகள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதாகச் சந்தேகம் நிலவுவதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.



