
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – மிக் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (11) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
அந்த சர்ச்சைக்குரிய கொடுக்கல்-வாங்கல் விவகாரம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், அதே விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலகவும் நேற்று முன்தினம் காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
அவர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.



