தலைப்புச் செய்திகள்

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் கைது

ண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நேற்றிரவு (09) பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் – கைது செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் மற்றும் எழுதுவினைஞர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.