தலைப்புச் செய்திகள்

வரி செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில், கொழும்பு மாநகர சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அரசுக்கு வற் (VAT) வரியை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு கொழும்பு மாநகர சபை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் ரூ. 1,034 மில்லியன் வற் வரியை வசூலிக்க உத்தரவு கோரி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் கொழும்பு மாநகர சபை பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்க கொழும்பு மேலதிக நீதவான் ஒஷாத மிகர மகாராச்சியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.