
விசா விதிமுறைகளை மீறியதாகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டுப் பிரஜைகளை நேற்று (06) கொள்ளுபிட்டியில் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கை, கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உத்தரானந்த மாவத்தையிலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 41 ஆண்களும் 33 பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்ததாகவும், மோசடியான நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.


