அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார்

🕔 March 5, 2016

Fonseka - 04
– க. கிஷாந்தன் –

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் தலதா மாளிகைக்கு அவர் மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார்.

அங்கு சென்ற அமைச்சர் சமய வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

தலதா மாளிகைக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பீல்ட் மார்ஷர் பொன்சேகா, மல்வத்துப்பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.Fonseka - 05

Comments

புதிது பேஸ்புக் பக்கம்