
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் ஈரானை கற்காலத்திற்கே திருப்பி அனுப்பும் அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆனால் ட்ரம்பின் போர் நிறுத்த கோரிக்கைகள் எல்லாம் பகுத்தறிவற்றை என, ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஒரு மாதமாக நடந்து வரும் போரில், அமெரிக்க படைகள் ஈரானின் ராணுவ தளங்களையும் உட்கட்டமைப்புகளையும் பெருமளவில் அழித்து விட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், அடுத்த சில வாரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி இரண்டு மூன்று வாரங்களுக்குள் போரை முடித்துக்கொண்டுவந்து – அமெரிக்க படைகள் ஈரானிலிருந்து வெளியேறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்துவதில் தங்களை விட – ஈராந்தான் தீவிரம் காட்டி வருகிறது என்றும், ஆனால் அதை ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் போர் நிறுத்த கோரிக்கைகளை பகுத்தறிவற்றை என குறிப்பிட்டுள்ள ஈரான் தரப்பு – நட்பு நாடுகள் மூலமே போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது பற்றி சாத்தியக்கூறுகள் குறித்து, அமெரிக்காவும் ஈரானும் ஆராய்ந்து வருவதாக சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த பேச்சு வார்த்தைகள் குறித்து இரு நாடுகளும் நேரடியாக விவாதிக்கின்றனவா, அல்லது சீனா, பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகள் மூலம் இந்த விவாதங்கள் நடைபெறுகின்றனவா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
ஹோர்முஸ் நீரிணை சுதந்திரமாக இருந்தால் மட்டுமே – போர் நிறுத்தம் நிகழுமென ட்ரம்ப் கூறி வருவதாக தெரிகிறது.
ஆனால் தங்களின் நட்பு நாடுகளைத் தவிர, வேறு யாருக்கும் ஹோர்முஸ் நீரிணை நதிறக்கப்படாது என ஈரான் உறுதியாக நிற்கிறது.


