தலைப்புச் செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியாக அஹ்மட் காரியப்பர் தெரிவு

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே. அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் 2026 மார்ச் 24ஆம் திகதி தொழில்நுட்பவியல் பீடத்தில் நடைபெற்ற விசேட பீடக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக்கூட்டம் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்றது. பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆர்.கே. அஹ்மட் றிபாய் காரியப்பர், கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். தற்போது அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கணினி விஞ்ஞானத்தில் முதுநிலைப் பட்டம் (MSc) மற்றும் MPhil பட்டங்களைப் பெற்றுள்ளார்.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் தற்போது கல்முனையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.