
மத்திய கிழக்கை நோக்கி சென்றுள்ள அமெரிக்காவின் விமானம் தாங்கி யு.எஸ். ஜெரால்ட் ஃபோர்ட் (USS Gerald R. Ford ) கப்பல், எரிபொருள் நிரப்பாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படக் கூடியதாகும்.
மிதக்கும் கோட்டை என வர்ணிக்கப்படும் இந்தக் கப்பல் வர்ணிக்கப்படுகின்றது.
அமெரிக்க கடற்படை வசம் உள்ள உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர் கப்பல்தான் யு.எஸ். ஜெரால்ட் ஃபோர்ட்.
இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த போர் திறன் கொண்ட பிரம்மாண்ட கப்பலாக பார்க்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்திருந்தாலும் 2023ஆம்ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக இது செயல்பாட்டிற்கு வந்தது.
அணு சக்தியால் இயங்கக்கூடிய இந்த கப்பலில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இந்தக் கப்பல் 90 போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நான்காயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் என – சுமார் ஒரு லட்சம் டொன் எடையை சுமக்கும் திறன் கொண்டது.
333 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் மின்காந்த விமான ஏவுதல் அமைப்பைக் கொண்டது. அதே நேரத்தில், எரிபொருள் நிரப்பாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதனால் செயல்பட முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
இந்த கப்பல் 90 ஆடுகளுக்கு மேலாக சேவைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒற்றை கப்பலை உருவாக்குவதற்காக இந்திய மதிப்பு சுமார் 04 லட்சத்து 956 ஆயிரம் கோடி ரூபாயை – அமெரிக்கா செலவு செய்திருக்கிறது.
சமீபத்தில் வெனிசுவலா மீது தாக்குதல் தொடுத்து நிக்கோலஸ் மதுராவை சிறை பிடிக்க, இந்த பிரம்மாண்டம் போர்க் கப்பல்தான் பயன்படுத்தப்பட்டது.


