வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

🕔 March 2, 2016
Shyamali priyadarshani perera - 01முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேராவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை எடுத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோர் வர்த்தக மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வாஸ் குணவர்தனவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்