தலைப்புச் செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம், ஏழாவது நாளை எட்டியது

னாதிபதி செயலகத்திற்கு எதிரே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் – இன்று (01) ஏழாவது நாளை எட்டியுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக பாடசாலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனடியாக உத்தியோகபூர்வ கற்பித்தல் சேவையில் இணைக்கக் கோரி, இலங்கை பாடசாலைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் இருவர் நேற்று (31) போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.