தலைப்புச் செய்திகள்

கிறீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவும் தயார்: ட்ரம்ப் தெரிவிப்பு

வெனிசுவேலாவைத் தொடர்ந்து தற்போது கிரீன்லாந்துக்கு – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறி வைத்திருக்கிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என்று அவர் கூறிவரும் நிலையில், கிறீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்தும் எண்ணம் இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்திருப்பது – சர்வதேச அரசியலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய பட்டியலில் கிரீன்லாந்து கைப்பற்றுவதை மீண்டும் சேர்த்திப்பதாகவும், இதற்காக அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்துவதும் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும் – அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

டென்மார்க்கின் ஓர் அங்கமாக கிறீன்லாந்து இருந்தாலும், கிரின்லாந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

கிறீன்லாந்தில் தனிமங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அரிய வகை தனிமங்களை அடையும் நோக்கத்திலேயே கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற விரும்புகிறது என கூறப்பட்டு வந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்காகவே கிரீன்லாந்தை கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் கூறி வருகிறார்.

குறிப்பாக ஆர்டிக் பகுதியில் சீனா ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கிறீன்லாந்து அவசியம் என்று, தற்போது வெளிப்படையாக கிறீன்லாந்து பற்றி அமெரிக்கா பேசத் தொடங்கியுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் இந்த கருத்துக்கு டென்மார்க் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. கிறீன்லாந்து மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது நேட்டோ அமைப்பின் முடிவாக இருக்கும் என, டென்மார்க் கூறியுள்ளது.

கிறீன்லாந்தில் சுமார் 45 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது