
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 58 வாக்குகளுக்கு எதிராக 56 வாக்குகளுக்கும் அளிக்கப்பட்டன.
கடந்த 22ஆம் திகதியன்று கொழும்பு மாநகர சபையில் வரவு – செலவுத் திட்டம் முதன்முதலாக சமர்ப்பிக்கப்பட்ட போது, வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

கூட்டு எதிர்க்கட்சி அதற்கு எதிராக வாக்களித்தமையினால், சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. அதன் போது 60 உறுப்பினர்கள் எதிராகவும் 57 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.


