தலைப்புச் செய்திகள்

2341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவிப்பு

ந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம், தற்போது வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 2,341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் ரி56 ரக துப்பாக்கிகள் 73, கைத்துப்பாக்கிகள் 59, இரண்டாயிரத்து 126 ஏனைய வகை துப்பாக்கிகள் அடங்கும்.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 793 கிலோகிராமுக்கும் அதிகளவான ஹெரோயின், மூவாயிரத்து 683 கிலோகிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16,686 கிலோகிராமுக்கு அதிகளவான கஞ்சா என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 790,461 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட 1,641 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 73,634 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.