
பலாங்கொட, பின்னவல பகுதியில் இன்று மதியம் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 26 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
குறிப்பிட்ட நபர் – குழுவொன்றுடன் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மண் மேடு சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னர் இரண்டு மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சிறிய காயங்களுக்குள்ளான மற்றொரு நபரும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


