தலைப்புச் செய்திகள்

2000 ரூபாய் தாள் விரைவில் புழக்கத்துக்கு வரும்: மத்திய வங்கி அறிவிப்பு

சமீபத்தில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள்கள, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் படிப்படியாக புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இவ்வருடம் ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று, மேற்படி நாணயத்தாள் வெளியிடப்பட்டது.

நிதி அமைப்பில் சீரான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தற்போது தங்கள் பணத்தை கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த செயல்முறை தொடரும் போது, ​​வங்கிகள் மூலம் இந்த நாணயத்தாள் – கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த மாற்றத்தின் போது பொதுமக்களின் ஒத்துழைப்பை – இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளதோடு, இயந்திர அளவுத்திருத்தம் முடிந்ததும் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கி வழிகளிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.