தலைப்புச் செய்திகள்

கோளாவில் பகுதியில் முறையாக பூர்த்தி செய்யப்படாத வடிகான் நிர்மாணம்: RDA கவனமெடுக்குமா?

கோளாவில் பகுதி பிரதான வீதியோரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்கள், நீண்ட நாட்களாகியும் முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆலயடிவேம்பு பிரசே செயலக பிரிவுக்குட்பட்ட – கோளாவில் பகுதியிலுள்ள, அக்கரைப்பற்று – சாகாமம் பிரதான வீதியோரத்தில், மேற்படி வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன. வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் (RDA) – இந்த வடிகான்களை நிர்மாணித்தனர்.

இந்த நிலையில், குறித்த வடிகான்களுக்கான மூடிகள் அரைகுறையாக போடப்பட்டுள்ளன என்றும், அவையும் சமனற்ற அளவுடைய மூடிகளாக உள்ளன எனவும் மக்கள் சுட்டிக்காடடுகின்றனர்.

மேலும், வடிகான் நிர்மாணத்துக்காகத் தோண்டப்பட்ட இடங்கள், இதுவரை மூடப்பட்டு சீராக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, குறித்த வடிகான்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தாண்டிச் செல்லும் மக்கள் – பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றார்கள்.

எனவே, இது தொடர்பில் – உடனடிக் கவனமெடுத்து, மேற்படி வடிகான் நிர்மாணத்தை முறையாகப் பூத்தி செய்யுமாறு – வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.