லஞ்சம் பெற்ற அதிபர் கைது

🕔 February 24, 2016

Bribe - 098ரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது செய்யப்பட்டார்.

பாடசாலை அலுவலகத்தில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறிச தெரிவித்தார்.

குறித்த பாடசாலையின் தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக, மேற்படி அதிபர் 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றபோது கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்