தலைப்புச் செய்திகள்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வழங்கிய வங்கி அதிகாரி கைது

ரச வங்கியொன்றின் முன்னாள் கடன் அதிகாரியொருவர் – போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வர்த்தகர்களுக்கு கடன் வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பன்னிப்பிட்டிய – பெலவத்தையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று முன்தினம் (15) கைது செய்தனர்.

சந்தேக நபர், இவ்வாறு வழங்கும் கடன்களுக்கு தரகுப்பணம் பெற்றதாகவும், வர்த்தகர்கள் உட்பட பல நபர்களுக்கு கடன் வழங்குவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், போலி ஆவணங்களை உருவாக்குவதற்காகவும், கடன் பெறுபவர்களிடமிருந்து சந்தேக நபர் பணம் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது.