தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை

Mahinda - 094இந்தியாவின் மற்றொரு மாநிலமாக இலங்கை மாறும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று வியாழக்கிழமை ஆஜராகிய பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால், இலங்கை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகவே மாறும் என்று அவர் எச்சரித்தார்.

“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் முடங்கிப் போயிருக்கின்றன.

ஊடக நிறுவனங்கள் – அரச தலைவர்களை விமர்சிக்காமல், அவர்களின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.