
கெலிஓயா காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 02 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதி நீதிமன்ற நீதிபதி இன்று (21) காலை – அவரின் அலுவலகத்தில் இருந்தபோது, லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியிலுள்ள ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபரின் மகன் தொடர்பான விவாகரத்து வழக்கில் – தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக காதி நீதிமன்ற நீதிபதி லஞ்சம் கோரியிருந்தார்.



