தலைப்புச் செய்திகள்

பெண் ஆசிரியரைத் தாக்கிய ஆண் ஆசிரியர்: நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் உறுதி

எம்பிலிபிட்டியவில் உள்ள பாடசாலையொன்றில் பெண் ஆசிரியையைத் தாக்கிய ஆண் ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சம்பவம் குறித்து இன்றுதான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் ஆண் ஆசிரியை மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். மேலும், சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் உலக மகளிர் தினத்திற்கு முன்னதாக நேற்று நடந்தது.