
பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்து வாங்குவதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் வரும் மார்ச் 20 வரை நீட்டிக்கப்படும் என்று கல்வி அமைச்சு, அறிக்கை ஒன்றினூடாகத் தெரிவித்துள்ளது.
மேற்படி வவுச்சர்கள் இன்று (பிப்ரவரி 28) காலாவதியாகும் என்று ஏற்கனவே அமைச்சு தெரிவித்திருந்தது.



