
ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளவை உட்பட அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படாமலுள்ள அனைத்து வாகனங்களும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் விற்கப்படும் என்று, அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் மூலம் பெறப்படும் அனைத்து வருமானமும் திறைசேரியில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் 800க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர்களுக்கு சுமார் 68 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனங்களைப் பெற்றவர்களில் சமன் ரத்னபிரிய, சமன் அத்தௌடஹெட்டி, சுரங்க மத்தும பண்டார, ஆர். பாஸ்கரலிங்கம் மற்றும் ரோஸி சேனநாயக்க ஆகியோர் அடங்குவர்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



