தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேறியது

ள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, 187 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். யாரும் எதிராக வாக்களிக்கவில்லை.

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும், அவற்றை சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கு 156 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.