
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபரெஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக – கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இருவருக்கும் சொந்தமான 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு கணக்கு (joint account) தொடர்பில், பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016 முதல் நடத்தப்பட்ட விசாரணைகளில் – யோசித ராஜபக்ஷ நிதி குறித்து திருப்திகரமான விளக்கங்களை வழங்கத் தவறியதை அடுத்து, பணமோசடி சட்டத்தின் கீழ், இருவருக்கும் எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இதன் பின்னர், வழக்கில் டெய்சி ஃபாரெஸ்ட்டை சந்தேக நபராகக் குறிப்பிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபரெஸ்ட் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முறையாக சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டனர்.
பணமோசடி சட்டத்தின் கீழ் இவருவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.



