
அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் உத்தரவில் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் டிரம்பின் திட்டம் “மீண்டும் சண்டையைத் தூண்டும்” என்று எகிப்து எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தத் திட்டம் மத்திய கிழக்கில் குழப்பத்தை பரப்பி இஸ்ரேலுடனான அமைதியை பாதிக்கும் என்று ஜோர்டான் தெரிவித்துள்ளது.
காஸா மக்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பிறகு, காஸாவை அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஒப்படைக்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
காஸா மக்களை “தன்னார்வமாக வெளியேற” அனுமதிக்கும் திட்டத்தைத் தயாரிக்குமாறு, இஸ்ரேல் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இஸ்ரேல் நடத்திய போரில் குறைந்தது 61,709 பலஸ்தீனர்கள் மரணித்துள்ளனர் என்று காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் பாருங்கள்



