தலைப்புச் செய்திகள்

ஹமாஸ் வசமிருந்த 03 பணயக் கைதிகள் விடுவிப்பு

பணயக் கைதிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தனர்

மாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மூன்று பெண்களை – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்து விட்ட நிலையில், அவர்கள் இஸ்ரேல் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ”ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உறுதிபூண்டுள்ளது” என, ஹமாஸ் பேச்சாளர் அபு உபைதா தெலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்; “போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு முன்பே எட்டப்பட்டிருக்கலாம், ஆனால் நெதன்யாகுவின் தீங்கிழைக்கும் நோக்கங்கள், அவரை இந்த இனப்படுகொலைப் போரை தொடரச் செய்தது.

நமது மக்களிடையே இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் மதிக்கவும், கால அட்டவணையை மதிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவை அனைத்தும் பரஸ்பரத்தைப் பொறுத்தது, இல்லையெனில் முழு ஒப்பந்தமும் சமரசம் செய்யப்படும்.

அக்டோபர் 7 சம்பவம், பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஒடுக்குமுறையின் விளைவாகும்.

அனைத்து தீமைகளுக்கும் ஆக்கிரமிப்பே மூலமாகும். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

இதையும் பாருங்கள்