தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல்
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதற்கு எதிராக உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடிப்படை உரிமைகள் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
பணச் சலவைக் குற்றச்சாட்டின் கீழ் தன்னைக் கைது செய்யும் பொருட்டு கம்பஹா, பூகொட, மாத்தற மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் ‘பி’ (B) அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளனர் என்று, தனது மனுவில் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த ‘பி’ (B) அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டவை என்றும் பஸில் ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி மனுவில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.