சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

🕔 February 16, 2016

Gun Shot - 01325
லப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த இருவரும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழங்கொன்றில், மேற்படி இருவரும் சாட்சியமளிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்படி இருவரும் தேநீர் அருந்துவதற்காக நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வந்தபோது, அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டினை நடத்தியவர் பஸ்ஸில் தப்பிச் சென்றதாக, நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்