தலைப்புச் செய்திகள்

பொதுத் தேர்தல்: மை பூசும் விரல் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் – கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலிலோ மை பூசப்படும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்கனவே இடது கையின் சிறிய விரலில் மை பூசப்பட்டுள்ளதாலும், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடது கையின் கட்டை விரலைப் பயன்படுத்தவிருப்பதாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இம்மாதம் 26 ஆம் திகதியும் நாடாளுமன்றத் தேர்தல் 2024 நொவம்பர் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.