தலைப்புச் செய்திகள்

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

திர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுவை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்தமையை – உச்ச நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.

சம்பந்தரப்பட்ட கட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (23) வழங்கியது.

இதற்கிணங்க, வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுவை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.