
வீடொன்று தீப்பிடித்ததில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தாய், தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.



