தலைப்புச் செய்திகள்

முஷாரப்பின் ‘வலது கை’யாக செயற்பட்ட, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரனூஸ், மக்கள் காங்கிரஸில் இணைவு

– முன்ஸிப்-

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம். ரனூஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் எம்.எம்.ஏ. காதர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான ஐ.எல். மாஹிர் உள்ளிட்டோர் முன்னிலையில், ரனூஸ் – கட்சியில் இணையும் நிகழ்வு சம்மாந்துறையில் இடம்பெற்றது.

சட்டத்தரணி ரனூஸ், ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதியாக அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்புடன் மிகவும் நெருக்கமாக இருந்து – அவரின் ‘வலது கை’யாகஅரசியலில் ஈடுபட்டு வந்தார்.

அந்தக் காலப்பகுதியிலேயே கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ரனூஸ் நியமனம் பெற்றார்.

இந்த நிலைதான் அவர் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார்.