தலைப்புச் செய்திகள்

ஓய்வூதியர்கள், நெற் செய்கையளர்கள் மற்றும் மீனவர்களுக்கு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

ய்வூதியர்கள், நெற் செய்கையாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில் – அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ரூபா 3,000/- மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதேவேளை, 2024/2025 பெரும் போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் லிலசாயிகளுக்கு ஒரு ஹெட்டேயருக்கு தலா ரூபா 25000/- என்ற வகையில் ஆகக்கூடியது 02 ஹெக்டேயருக்கு உர மானியத்தை அதிகரித்து வழங்கப்படவுள்ளது. மேலும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கப்பவுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை தேசிய வரவு – செலவுத் திட்ட திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு. திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.