
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் இன்று (03) தெரண தொலைக்காட்சி உரிமையாளரும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரருமான திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டனர்.
கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான மௌபிம ஜனதா கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களாக ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஹம் சிறிசேன- இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்குக்கான தேர்தல் அமைப்பாளராகவும், சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ராஜிகா விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.



