முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன், சாரயக் கடை ‘பேர்மிர்’ பெற்றமை அம்பலம்

🕔 September 30, 2024

கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களில் (பேர்மிட்) ஒன்று – தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான சி.வி.விக் னேஸ்வரனின் ‘கோட்டா’வில் வழங்கப்பட்டுள் ளமை அம்பலமாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில், ஏ- 9 வைன் ஸ்ரோர் எனும் பெயரில் இயங்கும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே, இந்த மதுபான சாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தனுசா நடராசா என்னும் பெயரில் இந்த மதுபானசாலைக்காக விக்னேஸ் வரன் பரிந்துரைத்துள்ளார்.

‘இவ்வாறு உங்கள் பெயரில் இந்த மதுபானசாலை வழங்கப்பட்டுள்ளதே’ – என முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வர னைத் தொடர்புகொண்டு ஊடகமொன்று கேட்டபோது, “அந்த மதுபானசாலை அனுமதியை தாய், தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக்கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை.” என்று பதிலளித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் 172 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவை திறக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்