
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் – அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வாக்குப்பெட்டிகளை எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு விடுவிப்பார்கள் எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இம்முறை வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால், மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
அதன்படி 03 அளவுகளில் வாக்கு பெட்டிகளுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



