ஓய்வுபெறும் மலேசியத் தூதுவருக்கு, அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

🕔 February 11, 2016

Hakeem - 987
– ஷபீக் ஹுஸைன் –

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான மலேசியா தூதுவர் அஸ்மி ஸைனுதீனை இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை முஸ்லிம்களின் சமூக மற்றும் அரசியல் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் தன்னுடைய பங்களிப்பை நல்குவதற்கு சித்தமாக இருப்பதாக, அமைச்சர் ஹக்கீமிடம் மலேசிய தூதுவர் அஸ்மி ஸைனுதீன் உறுதியளித்தார்.

இலங்கைக்கான மலேசிய தூதுவரின் சேவையினைப் பாராட்டிய அமைச்சர் ரஊப் ஹக்கீம், அவருக்கு தனது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துக்கொண்டார்.Hakeem - 986

Comments

புதிது பேஸ்புக் பக்கம்