தலைப்புச் செய்திகள்

தொலைபேசி அழைப்பில் தன்னைக் காப்பாற்றுமாறு நாமல் அழுதார்: அமைச்சர் நிமல் சொல்லும் புதிய தகவல்

ரகலய மக்கள் போராட்டம் நடைபெற்ற போது – தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் கதறி அழுதார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டம் நடைபெற்ற காலத்தில், அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது, “என்னைக் காப்பாற்றுங்கள்” என தொலைபேசி ஊடாக நாமல் அழுது புலம்பினார் என அவர் கூறியுள்ளார்.

ராணுவத் தளபதிக்கும் அவர் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியிருந்தார் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய நிலைமைகளை மறந்து தற்போது – நாமல் ராஜபக்ஷ மார்தட்டிக் கொள்வதாகவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.