மஹிந்தவின் புதிய அலுவலகம், பத்தரமுல்லயில் நாளை உதயம்

🕔 February 11, 2016

Mahinda - 094ஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான புதிய அலுவலகமொன்று நாளை வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் திறக்கப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையிலே, இந்த அலுவலகம் உதயமாகிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகையினர், இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் தமது அரசியல் ரீதியான ஊடகவியலாளர் சந்திப்புக்களை நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமய விகாரையில் நடத்தி வந்தனர்.

ஆயினும், குறித்த விகாரையினை மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிலேயே அண்மைய நாட்களாக அரசியல் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்