
– பாறுக் ஷிஹான் –
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று, அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் 04 தொகுதிகள் அமைந்துள்ளன. அதன்படி, அம்பாறையில் 188222, சம்மாந்துறை 99727, கல்முனை 82830, பொத்துவில் தொகுதியில் 184653 வாக்களர்கள் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27645 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26778 எனவும் 867 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
42 மையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்றும், ஹார்டி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணிfள் நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையில் அம்பாறையில் 184, சம்மாந்துறையில் 93, கல்முனையில் 74, பொத்துவிலில் 177 வாக்களிப்பு நிலையங்கள் என – அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.



