தலைப்புச் செய்திகள்

புகைத்தல், மதுபான பழக்கங்களினால் உயிரிழப்போர் தொகை அதிகரிப்பு

லங்கையில் நாளாந்தம் 10இல் ல் 08 பேர் தொற்றா நோய்களினால் உயிரிழப்பதாகவும், புகைப்பிடித்தல் மற்றும் மதுபான பாவனையே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புகைத்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக – மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் (ADIC) இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டில் புகைத்தல் மற்றும் மதுபான பாவனைக்காக ஒவ்வொரு நாளும் சுமார் 121 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 

அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டில் மது பாவனையினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 237 பில்லியன் ரூபாய் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.