
போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையில் கடவுச்சீட்டை பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதிவாதியான டயானா கமகேவின் கைரேகைகளைப் பெற்று, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



