“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

🕔 August 27, 2024

”எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தால் – ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போன்” என்று, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், ”எனது பல்கலைக்கழகத்தை மீட்டுத் தந்ததுடன், அதைத் திறந்து வைக்கவும் ஜனாதிபதி முன்வந்தார்” என்றும், அதற்கும் அரசியலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும், தமது கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாக அமையுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஆளுநர் வேண்டும் என்று – எந்த ஒரு உடன்படிக்கையும் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்யவில்லை எனவும், தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிப்பதற்காகச்செய்யப்படும் பிரச்சாரம் இது என்றும் அவர் கூறினார்.

”எனது மகனின் திருமண வைபவத்தின்போது ஜனாதிபதியும், சஜித்தும் வந்திருந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறான அரசியல் உறவுகளை தவிர்க்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்