தலைப்புச் செய்திகள்

மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்பாஸின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளது: தேர்தல் ஆணையாளர் நாயகம் தகவல்

னாதிபதி வேட்பாளர் டொக்டர் முகம்மட் இஸ்யாஸ் நேற்று மரணமடைந்த போதும், அவரின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முகம்மட் இல்யாஸ் (79 வயது) நேற்று (21) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக இவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், சுயேட்சை வேட்பாளராக நிறுத்தப்பட்ட மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா என, தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரெிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே ஜனாதிபதி வேட்பாளர் முஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று நபரை முன்வைக்க பிரதிநிதிகள் விண்ணப்பித்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த வேட்பாளர் இல்யாஸ், முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.