
பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவக்கு – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு செல்ல தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (21) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்த அவர், நாட்டின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத்தின் நன்மை கருதி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.
தனது உரையை முடித்த பின்னர், கருணாதாச கொடிதுவக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கமாகச் சென்று அமர்ந்து கொண்டார்.
2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் – பொதுஜன பெரமுனவின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் இருந்து கருணாதாச கொடித்துவக்கு 114,319 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.



