தலைப்புச் செய்திகள்

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் அவர் வகித்த தவிசாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகா இன்று (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் களனி தொகுதி அமைப்பாளராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில காலமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கொண்டே, அக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை மிகக் கடுமையாக சரத் பொன்சேகா விமர்சித்து வந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு – சரத் பொன்சேகா சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.