தேங்காய் உடைத்த சீனிகம விகாரையில், சி.சி.ரி.வி. கமெரா பொருத்த முடிவு
சீனிகம பௌத்த விகாரையில் சி.சி.ரி.வி. கமெராக்களைப் பொருத்துவதற்கு பௌத்த விவகாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விகாரையிலுள்ள இரண்டு பாரிய உண்டியல்கள் உடைக்கப்பட்டமையினை அடுத்து, விகாரையின் நம்பிக்கையாளர் சபை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே, சி.சி.ரி.வி. கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.
சீனிகம விகாரையில் இதுபோன்று மொத்தமாக 05 பெரிய உண்டியல்கள் உள்ளன.
இதேவேளை, இந்த விகாரையில் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தேங்காய்களை உடைத்து சாபமிட்டு, சமய வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் உருவாக்கியுள்ள நிதி குற்ற பொலிஸ் பிரிவினை மூடி விடுமாறு கோரியே இந்த வழிபாடு இடம்பெற்றது.